செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (14:05 IST)

அம்மா அரசைக் கண்டு கூஜா புயலான கஜா புயல்: அமைச்சர் தடாலடி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசின் துரித நடவடிக்கயால் கஜா புயல் கூஜா புயல் ஆகியுள்ளது என கூறியிருக்கிறார்.
கஜா புயலானது இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. தமிழக அரசின் போதிய முன்னேற்பாடு நடவடிக்கையால் பல அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. 
 
அதேபோல் பல இடங்களில் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலையில் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது. மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை என பல துறைகள் ஒன்றினைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தமிழக அரசின் இந்த துரித நடவடிக்கையை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
 
கஜா புயல் தாக்குதலால் தமிழகத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அம்மா அரசின் துரித நடவடிக்கையாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த சமயோஜித முன்னேற்பாடு நடவடிக்கையாலும் பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான முறையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேகமாக வந்த கஜா புயலானது தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகளை பார்த்து கூஜா புயல் போல ஆகிவிட்டது என அவர் கூறியிருக்கிறார்.