கஜா புயல் ! பலி எண்ணிக்கை உயர்வு !

gaja strom
Last Modified வெள்ளி, 16 நவம்பர் 2018 (19:37 IST)
கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் புயல் கடந்த மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. 

இருப்பினும் தமிழக அரசின் சிறப்பான முன்னேற்பாடுகளால் புயலின் மையப்பகுதி கரையை கடந்ததும் மீட்புப்பணிகள் தொடங்கிவிட்டன.
gaja strom

இந்நிலையில் புயல் தாக்குதலால்  29 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாகவும், பல ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் ,பல லட்சம் மக்கள் வீடிழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
gaja strom
சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் சாய்ந்திருந்த மின்கம்பங்களும் சரிசெய்யப்பட்டு வருவதால் மிக விரைவில் மின்சாரம் கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது. 
 
கஜா புயல் தாக்கத்தால் தஞ்சையில் 5 ஆயிரம் மின்கம்பங்களும், நாகையில் 4 ஆயிரம் மின்கம்பங்களும், திருவாரூரில் 3 ஆயிரம் மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளது.
 
தீவிர புயலாக மையம் கொண்டிருந்த கஜா, காலை 8.30க்கு புயலாக வலுவிழந்த நிலையில் 9.30 மணிக்கு புயலானது முழுவதுமாக கரையைக் கடந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கஜா புயல் தாக்குதலால் நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் வீடுகள் இடிந்து விழுந்தும், கொட்டகைகள் இடிந்தும் 12 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனையடுத்து இன்று மாலையில் கஜா புயலால் படுகாயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
மேலும் இதில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
edappadi palanisamy
இந்தப் புயல் பாதிப்புகள் குறித்து அரசு அதிகாரிகள் அறிக்கை அளித்த பிறகுதான் மொத்த சேதங்களின் மதிப்பை குறிப்பிட முடியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :