மராத்தான் ஓடிய ஒரே முதலமைச்சர் விஜய்தான்!.. ட்ரோலில் சிக்கிய ஆதவ் அர்ஜுனா...
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினமான இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் ஆறு கிலோமீட்டர் மரத்தன் ஓட்டம் நடத்தப்பட்டது.
இதில் முதல்வர் விஜயும் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக 6 கிலோமீட்டர் தூரம் ஓடினார். சுமார் 30 நிமிடங்கள் அவர் எங்கும் நிற்காமல் ஓடினார் என சொல்லப்படுகிறது. விஜய் ரசிகர்களும், தவெகவினரும் இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
52 வயதில் 30 கிலோ மீட்டர் ஒரு இடத்தில் கூட நிற்காமல் முதல்வர் விஜய் ஓடினார்.. அண்ணனுகு என்னா எனர்ஜி!.. என்று பதிவிட்டு வருகிறார்கள். அதே போல் மராத்தான் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஆறு கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய ஒரே முதல்வர் விஜய் மட்டுமே என்று கூறியிருந்தார்.
இதை கையிலெடுத்த சிலர் 2024 ஆம் வருடம் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா 54 வயதில் 21 கிலோமீட்டர் ஓடினார். இது தெரியாமல் ஆதவ் அர்ஜுனா உளறிக் கொண்டிருக்கிறார் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.