வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (09:27 IST)

நெல்லை மேயர் சரவணனை மாற்ற வாய்ப்பா? என்ன பிரச்னை?

நெல்லை மேயர் சரவணனை மாற்ற வேண்டும் என 30 கவுன்சிலர்கள் போர் கொடி தூக்கிய நிலையில், இந்த பிரச்சனை பேசி தீர்க்கப்படும் என அமைச்சர் கே.என். நேரு பதில் அளித்துள்ளார். 
 
நெல்லை மாநகராட்சி மேயரை எதிர்த்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி மாநகராட்சியில் பணிகள் எதுவும் நடக்கவில்லை, மேயர் மீது பண மோசடி குற்றச்சாட்டு என அடுக்கக்கான புகார்களுடன் 35 திமுக கவுன்சிலர்கள் திருச்சியில் முகாமிட்டனர்.
 
இதையடுத்து மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்திக்க திட்டமீட்டுள்ளனர். இன்று காலை 11 மணிக்கு அமைச்சர் நேருவை திமுக கவுன்சிலர்கள் சந்திக்கவுள்ளனர்
 
நாளை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக தொடரும் சிக்கல்களால், நெல்லை மாநகர மேயரை மாற்ற வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.