இந்த ஆண்டின் வெப்ப அலை அறிவிப்பு வழிமுறைகள் வெளியானது!
இந்த ஆண்டு நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து வெப்ப அலையால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய மாநில அரசுககள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம். தோல் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலை வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
எல்லோரும் பருத்தி ஆடைகள் அணிந்து வெளியில் செல்லவும், கலர் குடைகளை பயன்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.