ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 மே 2023 (13:20 IST)

நீட் தேர்வு எழுத இருந்த மாணவன் திடீர் தற்கொலை!

இன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெறும் நிலையில் தேர்வு எழுந்த இருந்த புதுச்சேரி மாணவர் திடீர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ள இந்த தேர்விற்காக இந்தியா முழுவதும் 20.87 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மதியம் தேர்வு தொடங்க உள்ள நிலையில் புதுச்சேரியில் நீட் தேர்விற்காக விண்ணப்பித்திருந்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவர் ஹேமச்சந்திரன் இன்று காலை திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹேமச்சந்திரன் கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இந்நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K