1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 மே 2023 (19:55 IST)

அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பணி சலுகை அறிவிப்பு

pudhucherry
புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பணி சலுகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மா நிலத்தில்  அரசுத்துறைகளில் பணியாற்ற்றும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று காலை நேரம் 2 மணி நேரம் பணி சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிச்சலுகை அறிவிப்பை இன்று முதல்வர் ரங்கசாமி மற்றும் கவர்னர் தமிழிசை கூட்டாக அறிவித்தனர்.

இதற்கான அரசாணை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், வெள்ளிக்கிழமை தோறும் பெண்களின் பாரம்பரியய வழிபாடுகள் மற்றும் பூஜை செய்ய வெள்ளிக்கிழமைகளில்  காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை  என 2 மணி  நேரம் பணிச்சலுகை வழங்கப்படும்.

மாதம்தோறும் 3 வெள்ளிக்கிழமைகளில் இந்த அனுமதியை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், இந்த விடுப்புக்கு அனுமதி வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.  மேலும், அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் மட்டும் இருந்தால்,  நிர்வாகத்தின் நலலத்தின் பொருட்டு,  ஒரே நேரத்தில் இந்தச் சலுகை பெறக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.