திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 மே 2023 (09:13 IST)

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! – தரவிரக்கம் செய்வது எப்படி?

இந்தியா முழுவதும் நடைபெறும் மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு மே 7ம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது. இளங்கலை மருத்துவ படிப்பிற்கான இந்த நீட் நுழைவுத் தேர்விற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நீட் தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டு ஹால் டிக்கெட்டை தரவிறக்கிக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K