வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 4 மே 2023 (15:24 IST)

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

இதுகுறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதியில் நிலவுகிறதது. தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதையடுத்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் மே மாதம் ஆம் தேதி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகளில்  7 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகக்கூடும் . இது 8 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுடவடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இன்று தமிழகத்தில் புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, இராம நாதபுரம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், மதுரை ஆகிய பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள்து.

நாளை தமிழகத்தின் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

8 ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் ,  ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை படிப்படியாக 24 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.