1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 6 மே 2023 (20:55 IST)

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் நீட் தேர்வு ஒத்திவைப்பு

Manipur
மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று  நாளை நடக்கவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் பட்டியலின மாணவ அமைப்பினர் நடத்திய ஒற்றுமை பேரணியில் வெடித்த கலவரமும், . இரு பிரிவினருக்கிடையே மோதல் வெடித்த நிலையில் வீடுகள், கடைகள் தீ வைக்கப்பட்டுள்ளது. சுமார் 9 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது,  மணிப்பூரில் உள்ள 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கலவரக்காரர்களை கண்டதும் சுட மணிப்பூர் ஆளுனர் உத்தரவிட்டுள்ள  நிலையில்,  இந்தியா முழுவதும்  நாளை நடக்கவிருந்த நீட் தேர்வுகள் மணிப்பூரில் நடக்குமா என கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில்,  மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று  நாளை நடக்கவிருந்த( மே 7) நீட் தேர்வை ஒத்து வைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய தேர்வு தேதியை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும், மற்ற மாநிலங்களில் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.