1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nanjil sampath talk about parasakthi vs jananayagan

பராசக்தி ஓடுச்சா?!.. ஜனநாயகன் வரும்போது!.. தெறிக்கவிட்ட நாஞ்சில் சம்பத்!...

jananayagan
விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை கடந்த ஜனவரி 9ம்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர்.  அதேபோல், 10ம் தேதி உதயநிதியின் ரெட்ஜெயண்ட் வெளியிட்ட பராசக்தி திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டனர். இது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

ஜனநாயகன் படத்தின் வசூலை குறைப்பதற்காகவே வேண்டுமென்று அரசியல் காரணமாக பராசக்தி படத்தை வெளியிடுகிறார்கள் என்றெல்லாம் அவர்கள் சமூக வலைதளங்களில் பொங்கினார்கள். மேலும் பராசக்தி படம் வெளிவந்த போது அவர்களின் மொத்த கோபத்தையும் இந்த படத்தின் மீதும் சிவகார்த்திகேயன் மீதும் விஜய் ரசிகர்கள் காட்டினார்கள்..

ஒருபக்கம் படத்திற்கும் எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை என்பதால் படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. இன்னொரு பக்கம் ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனையில் சிக்கி வெளியாகவில்லை.

இந்நிலையில் தவெக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ‘ஜனநாயகனுக்கு எதிராக பராசக்தியா?.. பராசக்தி ஓடிச்சா?.. ஓடாது.. பராசக்தி ஓடாத போதே தெரிய வேண்டாமா உங்கள் நாடகம் இனி நடக்காது.. ஜனநாயகன் வரும்.. ஜனநாயகம் வரும்போது நீங்கள் நாற்காலியில் இருந்து நகர வேண்டி வரும்’ என பேசியிருக்கிறார்..
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
திடீரென மாயமான இளம்பெண்.. படுக்கையில் பாம்பின் சட்டை.. நாகினியாக மாறி மறைந்துவிட்டாரா?