1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 பிப்ரவரி 2026 (16:42 IST)

விதிமுறைகளை காட்டி எங்களை முடக்க நினைக்கிறது திமுக!.. கொதிக்கும் தவெக நிர்வாகிகள்..

tvk vijay
விஜயால் துவங்கப்பட்டிருக்கும் தமிழக வெற்றிக்கழக கழகம் என்கிற அரசியல் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெறும் என கணிக்கப்படுகிறது. தவெக தனித்துப் போட்டியிட்டாலே 18 சதவீத வாக்குகளை வாங்கும் என காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி சமீபத்தில் பேட்டி கொடுத்தார் அதேபோல் ஊடகம் ஒன்றில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் வருகின்ற தேர்தலில் தவெக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சொல்லியிருக்கிறார்..

ஒருபக்கம் கரூர் சம்பவத்தின் காரணமாக தவெக சார்பாக நடத்தப்படும் பொதுக்கூட்டங்களுக்கு காவல்துறை மூலம் பல நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. வருகிற 13-ஆம் தேதி சேலத்தில் விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கும் 50 நிபந்தனையுடன் அனுமதி கொடுத்திருக்கிறது காவல்துறை. குறிப்பாக அந்த பொதுக்கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது..

தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சிக்கு இப்படி ஒரு கட்டுப்பாட்டை இதுவரைக்கும் யாரும் விதித்தது இல்லை. கரூர் சம்பவத்திற்கு பின் அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டம் தொடர்பான விதிமுறைகளை உருவாக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் கேட்கப்பட்டது. உச்ச நீதிமன்றமும் சில வழிமுறைகளை(SOP) சொல்லியது. அதை காட்டியே தவெகவை திமுக அரசு காவல்துறை மூலம் முடக்க நினைப்பதாக தவெகவினர் சொல்கிறார்கள்..

சமீபத்தில் செய்தியாளர்களிடம் தவெக முக்கிய நிர்வாகி அருண்ராஜ் ‘வேலூரில் இந்த மதம் 8ம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த திட்டமிட்டு காவல்துறையிடம் மனு கொடுத்தோம்.. சில நாட்கள் கழித்து  அதே தேதியில் முதல்வர் நிகழ்ச்சி நடப்பதாக சொல்லி எங்கள் தலைவர் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.. இப்போது SOP-யை காட்டுகிறார்கள்.

அது முழுக்க முழுக்க பாரபட்சமான ஒன்று அதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்றால் 30 நாட்களுக்கு முன்பு அனுமதி கடிதம் கொடுக்க வேண்டும் என சொல்கிறார்கள்.. இது நடைமுறையில் சாத்தியம் இல்லை.. SOP தவெகவுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கிறது’ என்று பொங்கியிருக்கிறார்.