தொடர்புடைய செய்திகள்
- விதிமுறைகளை காட்டி எங்களை முடக்க நினைக்கிறது திமுக!.. கொதிக்கும் தவெக நிர்வாகிகள்..
- விஜய் யாருடைய ஒட்டுக்களை பிரிப்பார்!... நிர்மலா சீதாராமன் பரபரப்பு பேட்டி!..
- விஜய்க்கு ஜோசியம் சொன்ன பிரபல ஜோதிடர்!.. தவெக செம ஹேப்பி!....
- After All ஒரு நடிகன் நீ!.. விஜயை விமர்சிக்கும் தவாக வேல்முருகன்!..
- மெர்சல் படத்தை ரிலீஸ் பண்ணி கொடுத்தோம்!. நன்றி இல்லாதவர் விஜய்!.. கடம்பூர் ராஜூ கோபம்!...
விஜய் 22 மணி நேரம் ரோட்டில் நடக்க ரெடி!.. பர்மிஷன் கிடைக்குமா?.. ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்..
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரைக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் விதிக்கப்படாத கட்டுப்பாடுகள் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விதிக்கப்படுகிறது. விஜய் கரூரில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்திய போது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 21 பேர் உயிரிழந்த சம்பவம்தான் அதற்கு காரணம்.
இந்த சம்பவத்திற்கு பின் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற போது அரசியல் கட்சிகள் மக்கள் சந்திப்பு கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான விதிமுறைகளை விதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று நீதிமன்றமும் சில விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் (SOP) கொண்டு வந்தது..
அதைத்தான் தமிழக அரசு தற்போது தவெகவுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. தவெக தலைவர் விஜய் வருகிற 13-ஆம் தேதி சேலத்தில் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு 50க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை தமிழக காவல்துறை விதித்திருக்கிறது. அதிலும் 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்வார்கள், அதுவும் QR Code மூலம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதால்தான் தற்போது அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது..
அதேநேரம் ஆளும் கட்சியான திமுகவுக்கு இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லை. சமீபத்தில் கூட விருதுநகரில் திமுக இளைஞரணி மண்டல மாநாடு நடைபெற்றது. அங்கெல்லாம் இந்த கட்டுப்பாடுகளை போலீசார் விதிக்கவில்லை..
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா 30 வருட சினிமா வாழ்க்கையில் தினமும் பல மணி நேரம் உழைத்து நம்பர் ஒன் இடத்திற்கு வந்திருக்கிறார் விஜய்.. வீட்டில் சும்மா இருந்தால் நம்பர் ஒன்னாக வர முடியாது.. தான் நம்பர் ஒன்னாக இருக்கும் துறையை விட்டு அரசியலை கையில் எடுத்திருக்கிறார். அதை நிரூபிக்க அவர் 22 மணி நேரம் ரோட்டில் நடக்க தயாராக இருக்கிறார்.. மராத்தான் மாதிரி ஓடுவதற்கு கூட தயாராக இருக்கிறார்.. ஆனால் ஒவ்வொன்றுக்கும் அனுமதி அளிக்க போலீசார் 30 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.. இந்த மாதிரி ஒரு SOP-ஐ தமிழகத்தில் எந்த முதல்வரும் கொண்டு வந்ததில்லை என பேசியிருக்கிறார்.
இந்த சம்பவத்திற்கு பின் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற போது அரசியல் கட்சிகள் மக்கள் சந்திப்பு கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான விதிமுறைகளை விதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று நீதிமன்றமும் சில விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் (SOP) கொண்டு வந்தது..
அதைத்தான் தமிழக அரசு தற்போது தவெகவுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. தவெக தலைவர் விஜய் வருகிற 13-ஆம் தேதி சேலத்தில் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு 50க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை தமிழக காவல்துறை விதித்திருக்கிறது. அதிலும் 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்வார்கள், அதுவும் QR Code மூலம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதால்தான் தற்போது அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது..
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா 30 வருட சினிமா வாழ்க்கையில் தினமும் பல மணி நேரம் உழைத்து நம்பர் ஒன் இடத்திற்கு வந்திருக்கிறார் விஜய்.. வீட்டில் சும்மா இருந்தால் நம்பர் ஒன்னாக வர முடியாது.. தான் நம்பர் ஒன்னாக இருக்கும் துறையை விட்டு அரசியலை கையில் எடுத்திருக்கிறார். அதை நிரூபிக்க அவர் 22 மணி நேரம் ரோட்டில் நடக்க தயாராக இருக்கிறார்.. மராத்தான் மாதிரி ஓடுவதற்கு கூட தயாராக இருக்கிறார்.. ஆனால் ஒவ்வொன்றுக்கும் அனுமதி அளிக்க போலீசார் 30 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.. இந்த மாதிரி ஒரு SOP-ஐ தமிழகத்தில் எந்த முதல்வரும் கொண்டு வந்ததில்லை என பேசியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்