1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nainar nagendiran talk about modi meeting

மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் சர்ப்பரைஸ்.. நயினார் நாகேந்திரன் பேட்டி...

nainar
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கிறார்கள். பாஜகவை பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.இந்த முறை எப்படியாவது திமுகவை வீழ்த்த வேண்டும் என அதிமுகவும் பாஜகவும் திட்டமிட்டிருக்கிறது.

எனவே, அதற்காக வலுவான கூட்டணி அமைக்கும் வேலைகளில் அந்த கட்சிக்ள் இறங்கியுள்ளனர். ஏற்கனவே அன்புமணி பாமக இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறது. எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைவார்கள் என சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தெரிவித்தார். ஆனால் இப்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில்தான், பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் வருகிற 23ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் இந்திய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘பிரச்சாரத்திற்காக ஜனவரி 23ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார்.. பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே ஜனநாயக கூட்டணியின் நோக்கம்’ என்று கூறினார்.

அப்போது ‘இந்திய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் இணைவார்களா?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு 23ம் தேதி பொதுக்கூட்டம் வரை பொறுத்திருங்கள்.. அன்று எல்லாம் தெரியவரும்’ என கூறியிருக்கிறார்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
சிபிஐ விசாரணை!.. அன்னைக்கு கருப்பு... இன்னைக்கு வெள்ளை!.. விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்!...