தொடர்புடைய செய்திகள்
- அடுத்த சட்டசபையில் நாங்க இருப்போம்! – உறுதிமொழி எடுத்த பாஜக தலைவர்!
- அது இ பாஸ் இல்ல… ஆல் பாஸ் – இணையத்தில் பரவும் மீம்ஸ்கள்!
- தமிழக சாதனையாளர்களுக்கு அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகள்! – முதல்வர் வழங்கினார்!
- சென்னையில் விநாயகர் சிலை வைக்க முயற்சி! – இந்து முன்னணியை தடுத்த போலீஸ்!
- யார் கொடுத்தது இவ்வளவு அதிகாரம்? அரசு மீறு எகிறிய எச் ராஜா!
பாஜக வாயில் சிக்கிக் கொண்ட அதிமுக! – முத்தரசன் காரச்சார கருத்து!
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சமீப காலமாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ள நிலையில், அதை மோடிதான் முடிவு செய்வார் என முத்தரசன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்தது. இதுகுறித்து பொதுவெளியில் அதிமுக அமைச்சர்கள் சிலர் ஆளுக்கொரு கருத்து கூறியதால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழ தொடங்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அதிமுக தலைமையே முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடிகள் குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் “அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுகவினராலேயே சொல்ல முடியாது. அதை பிரதமர் மோடிதான் முடிவு செய்வார். பாம்பின் வாயில் சிக்கி கொண்ட தவளை போல, பாஜகவிடம் அதிமுக சிக்கிக் கொண்டுள்ளது. பாஜக தன்னை பலப்படுத்திக் கொள்ள திமுக உள்ளிட்ட கட்சிகளை பலவீனப்படுத்த முயற்சித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
