திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2020 (09:34 IST)

தமிழக சாதனையாளர்களுக்கு அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகள்! – முதல்வர் வழங்கினார்!

இந்தியாவின் 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில் சமூக செயல்பாடுகள் மற்றும் சாதனைகளுக்கான தமிழக அரசின் விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.

அதன்படி பெரம்பலூரில் நீரில் மூழ்கிய இளைஞர்களை காப்பாற்றிய வீர செயலுக்காக பெரம்பலூரை சேர்ந்த தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகியோருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் அறக்கட்டளை மூலம் 365 மாணவர்களின் கல்விக்கு உதவிய செல்வகுமார் என்பவருக்கு ஏபிஜே அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர கொரோனா காலத்தில் சிறப்பாக செயலாற்றிய முன்கள வீரர்கள் மற்றும் காவல்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்த காவலர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.