வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2020 (10:29 IST)

அடுத்த சட்டசபையில் நாங்க இருப்போம்! – உறுதிமொழி எடுத்த பாஜக தலைவர்!

நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வாழ்த்துகள் சொல்லியுள்ள பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தேர்தல் குறித்த உறுதிமொழியையும் எடுத்துள்ளார்.

இந்திய சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். மேலும் ”அடுத்த சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கட்டாயம் இருப்பார்கள். சட்டசபையில் நுழையாமால் விடமாட்டோம் என்ற உறுதிமொழியை எடுக்கிறோம்” என எல்.முருகன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் எல்.முருகனின் இந்த உறுதிமொழி அரசியல் வட்டாரங்களில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.