குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கூடிய இஸ்லாமியர்கள்..
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் பெருந்திரளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனர். தமிழகத்தில் இந்த போராட்டம் எதிரொலித்ததை தொடர்ந்து சென்னை பல்கலைகழக மாணவர்கள், மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று திமுக கூட்டணி நடத்திய பேரணி ஒரு பெரும் அதிர்வையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் மதுரையிலும் இஸ்லாமியர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.