திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (12:10 IST)

பெரியாரை பற்றி ட்வீட்டிய பாஜக! – ஆத்திரத்தில் வைகோ!

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வே.ராமசாமியின் நினைவு தினம் திராவிட கட்சிகளால் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக பெரியார் – மணியம்மை திருமணத்தை சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளது.

இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள வைகோ உடனடியாக அந்த பதிவை தமிழக பாஜக நீக்க வேண்டும் என்றும், பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.