வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (13:27 IST)

ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு..

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி சென்ற முக ஸ்டாலின் மீது சட்டவிரதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திமுக கூட்டணி பேரணி நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த பேரணியில் திருமாவளவன், தயாநிதி மாறன், வைகோ, உள்ளிட்ட பல தலைவர் உட்பட பல அமைப்பினரும் கலந்துக்கொண்டனர். எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் ஆரம்பித்த இந்த பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் முடிவு பெற்றது.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரணி நடத்திய மு.க.ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது சட்டவிரோதமாக கூடியது, அதிகாரிகள் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.