பாரதிய ஜனதா கழகமா? கட்சியா? – கன்ஃபியூஸ் ஆன காயத்ரி!
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட காயத்ரி ரகுராம் கட்சியின் பெயரை தவறாக சொன்னது பிரச்சார கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஊராட்சி தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. இதற்காக மதுரை வாடிப்பட்டி ஒன்றியத்தில் போட்டியிட பாஜகவுக்கு இரண்டு ஒன்றிய கவுன்சிலர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களையும் ஆதரித்து பேச நடிகை காயத்ரி ரகுராம் மதுரை சென்றார். பாஜக சார்பில் மக்களிடம் பேசி வந்த காயத்ரி ரகுராம் ஒரு சமயம் பா.ஜ.கவை பாரதிய ஜனதா கட்சி என்பதற்கு பதிலாக ‘பாரதிய ஜனதா கழகம்’ என்று கூறியுள்ளார்.
உடனடியாக சமாளித்து கொண்ட காயத்ரி வாக்காளர்களை ஆதரித்து பேசிவிட்டு திரும்பியுள்ளார். இது கூட்டத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.