தொடர்புடைய செய்திகள்
- ஆக... ரூபஸ்ரீ, நோ ஸாரி சுபஸ்ரீ.. துண்டு சீட்டு இருந்தும் உலறல்!!
- கிருஷ்ணசாமியுடன் டீலிங்: ப்ரைன் வாஷ் செய்ய அதிமுக ப்ளான்!
- பஸ் வசதி இல்லை என புகார் அளித்த பெண்: அமைச்சரின் அதிரடி ரியாக்சன்
- தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த அதிமுக அமைச்சர்! – மருத்துவமனையில் அனுமதி!
- ”திமுக ஆட்சிக்கு வந்தால்”..சூடுபிடிக்கும் இடைத்தேர்தல், நாங்குநேரியில் ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம்
விக்கிரவாண்டியில் சிக்கியப் பணம் – ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் !
விக்கிரவாண்டியில் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் 17.8 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகியத் தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் விக்கிரவாண்டி அருகே உள்ள கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே நடந்த சோதனையில் கார் ஒன்றில் இருந்து ரூ.17. 80 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. காரில் இருந்தவர் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக நகை வாங்கப் பணம் எடுத்துச் சென்றதாக சொன்னாலும் அவரிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் 5.6 கிலோ மதிப்புடைய 25 மற்றும் 10 கிராம் எடை கொண்ட வெள்ளிக்காசுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
