திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (20:25 IST)

தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த அதிமுக அமைச்சர்! – மருத்துவமனையில் அனுமதி!

நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜு திடீரென மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ரெட்டியார்ப்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க களக்காடு சென்ற மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.