1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin starts giving out pension

போக்குவரத்து ஊழியர்களுக்கு பென்ஷன் - ஸ்டாலின் துவங்கி வைத்தார்!

தமிழகம்
போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயணிகளின் நிலுவைத் தொகை வழங்கும் பணி தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். 

 
போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சற்றுமுன் முதல்வர் முக ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நிலுவையில் இருந்த ரூபாய் 497.32 கோடியை 2457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார். 
 
அதன்படி, போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயணிகளின் நிலுவைத் தொகை வழங்கும் பணி தொடங்கி வைத்தார். ஆம், 6 ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி இதனை துவங்கியுள்ளார். 
About Writer
Sugapriya Prakash