தொடர்புடைய செய்திகள்
- வைரஸுக்கு டெல்டான்னு பேர் வைக்கிறதா..!? – மய்யத்தார் கொந்தளிப்பு!
- தடுப்பூசி போட்டுக்கிட்டா பிரியாணி மற்றும் பல பரிசுகள்! – பொதுமக்கள் வரவேற்பு!
- மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் டீசல் விலை! – இன்றைய நிலவரம்!
- டிஸ்சார்ஜ் ஆகும்போது கொரோனா பரிசோதனை தேவையில்லை! – சுகாதாரத்துறை கடிதம்!
- மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தமிழகம் முழுவதிலும் இருந்து 100 புகார்கள் வந்துள்ளதாக தகவல்!
+2 பொதுத்தேர்வு நடக்குமா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை !
சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், +2 பொதுத்தேர்வு நடக்குமா என முதல்வர் ஆலோசனை.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டில் சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். எனவே, விரைவில் சிபிஎஸ்இ மற்றும் சிஐசிஇ ஆகியவை மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டிற்கான அளவுகோல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடந்து வருகிறது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாநில கல்வித்திட்ட பிளஸ் 2 தேர்வு பற்றி ஆலோசனை நடக்க உள்ளது.
