1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 ஜூன் 2021 (12:30 IST)

வேகமாக பரவிய கொரோனா அதே வேகத்தில் குறைந்து வருகிறது!

தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா அதே வேகத்தில் குறைந்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

 
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தினசரி கொரோனா பாதிப்பை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா குறைந்து வருவதால் பாதிப்பில் இருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் பிறந்துள்ளது. 
 
மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலை உருவாகும். தமிழகத்தில் கொரோனா இல்லாத நிலை விரைவில் உருவாகும். கடந்த  ஒரு வாரமாக நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளது.  முழு ஊரடங்கு கொரோனாவின் தாக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.