வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 ஜூன் 2021 (13:13 IST)

பள்ளிக்கூட மைதானத்தில் 215 குழந்தைகளின் எலும்புகூடுகள்! – கனடாவை உலுக்கிய சம்பவம்!

கனடாவில் உள்ள மூடப்பட்ட பள்ளி ஒன்றின் மைதானத்தின் கீழ் 215 குழந்தைகள் புதைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் கம்ப்ளூப்ஸ் பகுதியில் உள்ள மூடப்பட்ட பள்ளி ஒன்றின் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட ராடார் ஆய்வில் 215 குழந்தைகள் எலும்புகூடுகள் புதைந்து கிடக்கும் சம்பவம் தெரிய வந்துள்ளது. 1978 முதலாக மூடப்பட்டிருக்கும் அந்த பள்ளியானது பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஐரோப்பியர்கள் கனடாவை ஆக்கிரமித்தபோது அங்கிருந்த பழங்குடி குழந்தைகளை தங்கி படிக்க வைக்க பயன்படுத்திய பள்ளியாகும்.

அப்போதைய காலகட்டத்தில் பழங்குடி மக்களின் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையின் தடயமாக இது கருதப்படுகிறது. இதுகுறித்து கனடா மக்கள் அந்த பள்ளி முன்னர் கூடி அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், வரலாற்றில் நடந்த துயரமான சம்பவத்தை எண்ணி வேதனை அடைவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.