1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin says this the reason for dmk failure

திமுக தோல்விக்கு இதுதான் காரணம்!.. செயற்குழு கூட்டத்தில் பேசிய முக ஸ்டாலின்!..

mk stalin
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. அதோடு அதன் கூட்டணியில் இருந்த கட்சிகளும் தவெக பக்கம் சென்றுவிட்டன. இந்நிலையில்தான், இன்று சென்னை அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்டது. அதோடு அவர்களின் வயது வரம்பு 70 எனவும், ஒருவர் இரண்டு முறை மட்டுமே மாவட்ட செயலாளராக இருக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதோடு ஒன்றிய செயலாளர்களுக்கு வயது வரம்பு 60, கிளைச் செயலாளர்களுக்கு 45,  நகரச் செயலாளர்களுக்கு 60,  பேரூர் செயலாளர்களுக்கு 60,  மாநகராட்சி வட்ட செயலாளர்களுக்கு 50 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது..

அதன்பின் நிர்வாகிகள் முன்பு பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ‘நம் தோல்விக்கு பல காரணங்கள் இருப்பினும் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒன்று. அதை நாம் மறைக்க தேவையில்லை. நம் தவறுகளை முதலில் நாம் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டும்’ என பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஐபோன் வாங்கி தராததால் மலையிலிருந்து குதித்த இளைஞர்!.. தாய் தந்தை அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்!..