1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin says on Ayodhya verdict

”மதநல்லிணக்கத்துடன் முன்னேறுங்கள்”..ஸ்டாலின் கருத்து

முக ஸ்டாலின்
அயோத்தி தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் மக்கள் மதநல்லிணக்கத்துடனும் சமமான சிந்தனையுடனும் முன்னேறுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு, மசூதி கட்டுவதற்கு இஸ்லாமியர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என உத்திர பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பல அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியோர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ”அயோத்தி தீர்ப்பை விருப்பு வெருப்புக்கு உட்படுத்தாமல், அனைவரும் சமமான சிந்தனையுடனும் மதநல்லிணக்கத்துடனும் முன்னெடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றம் மத நல்லிணக்கத்தோடு தீர்ப்பு வழங்கியுள்ளதாக பல அரசியல் தலைவர்கள் கூறிவருகிற நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மத நல்லிணக்கத்துடன் முன்னேறுங்கள் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
’சாலையில் வித்தியாசமாக’ பிறந்தநாள் கொண்டாடிய சிறுவன் - வைரல் வீடியோ