செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 9 நவம்பர் 2019 (12:58 IST)

அயோத்தி தீர்ப்பு: கரசேவகர்கள் மகிழ்ச்சி – வீடியோ வெளியிட்ட அர்ஜுன் சம்பத்!

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட வழங்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து வீடியோ வெளியிட்டுள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ”ராமரின் ஜென்ம தேசத்தில் அவருக்கு கோவில் அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு. நாங்கள் யாரையும் எதிரிகளாக பாவிக்கவோ, பார்க்கவோ இல்லை. காஷ்மீர் பிரச்சினையில் சுமூக தீர்வு எடுக்கப்பட்டது போல, அயோத்தி வழக்கிலும் யாருக்கும் பாதகமில்லாத முடிவை அறிவித்திருக்கிறார்கள். இதனால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கர சேவகர்களும் மகிழ்ச்சியாக் உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

அயோத்தி தீர்ப்பு குறித்து மேலும் பலர் தங்கள் மகிழ்ச்சிகளையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.