’சாலையில் வித்தியாசமாக’ பிறந்தநாள் கொண்டாடிய சிறுவன் - வைரல் வீடியோ

child
sinojkiyan| Last Updated: சனி, 9 நவம்பர் 2019 (16:18 IST)
அனைத்து மக்களும் தங்களது பிறந்த தினத்தை தவறாமல் கொண்டாடுவர். அந்த வகையில் ஒரு சிறுவன் தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடி இருக்கிறான்.
 
ஒருசிறுவன் தனது பிறந்த நாளின் போது, சாலையில் வசிப்போர், வீட்டற்றவர்கள், ஆதரவற்ற முதியவர்கள் ஆகியோரை சந்தித்து அவர்களுக்கு, தனது அன்பளிப்பாக பரிசைக் கொடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
இந்த சின்ன வயதில் இத்தனை  மனித நேயத்துடன் சக மனிதர்களை நேசிக்கும் சிறுவனுக்கு பலரும் வாழ்த்தும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களீல்  வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :