1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. No victory in Ayodhya verdict PM Modi

அயோத்தி வழக்கின் தீர்ப்பில் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை - பிரதமர் மோடி

modi
அயோத்தி வழக்கின் தீர்ப்பில் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை என பாரத பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
ஒட்டு மொத்த நாடும் எதிர்ப்பார்த்திருந்த அயோத்தி சர்ச்சை நில வழக்கின் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஒரே தீர்ப்பாக வழங்கினர்.
 
அதில், அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கு சொந்தம். அங்கு  ராமர் கோயில் கட்டலாம் எனவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும், சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அமைப்பை 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும். சன்னி வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு, உத்தரபிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து  பிரதமர் மோடி கூறியுள்ளதாவது :
 
அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருக்கும் வெற்றியாகவோ,தோல்வியாகவோ கருத வேண்டாம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை. நீதிபரிலானத்தின் முக்கியத்துவத்தை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது.மேலும் நாட்டு மக்கள்அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பேண வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
அயோத்தி தீர்ப்பு: கரசேவகர்கள் மகிழ்ச்சி – வீடியோ வெளியிட்ட அர்ஜுன் சம்பத்!