1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor vishal helped three poor girls on study

பூங்கொத்துக்கு பதில் படிப்பு செலவு!.. முதல்வர் விஜயை இம்ப்ரஸ் செய்த விஷால்!...

vishal
முதல்வர் விஜய் திரைத்துறையில் 30 வருடங்களுக்கு மேல் நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருப்பது திரையுலகில் பலருக்கும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. எனவே திரைத்துறையை சேர்ந்த பலரும் முதல்வர் விஜயை நேரில் சென்று சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அவர்கள் எல்லோரையும் விஜய் தலைமை செயலகத்தில் சந்திப்பதை தவிர்த்துவிட்டு நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் மட்டுமே சந்தித்து வருகிறார்.

நேற்று கூட நடிகை சிம்ரன், நடிகர் சிம்பு மற்றும் ஷ்யாம் ஆகியோர் விஜயின் அலுவலகத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களை கூறி அது தொடர்பான புகைப்படங்களை தங்களின் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்..

vishal

இந்நிலையில்தான், நடிகர் விஷால் முதலமைச்சர் விஜயை நேரில்சந்தித்து அவருக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.  மேலும் ‘உங்களுக்கு கொடுக்கும் பூங்கொத்து மற்றும் சால்வை போன்ற சம்பரதாயங்களை விட மூன்று ஏழை சிறுமிகளில் படிப்பு செலவை நான் ஏற்றிருக்கிறேன். உங்கள் சார்பாக உங்கள் பெயரில் நான் அந்த உதவியை செய்திருக்கிறேன். அவர்கள் எப்போதும் உங்களை பெருமையோடு நினைவு கூர்வார்கள்’ என்று சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார். மேலும் அந்த ஏழை சிறுமிகள் பற்றிய விவரங்களையும் விஷால் பகிர்ந்துள்ளார்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
அந்த மனுஷன் மட்டும் அத செய்யலனா!.. விஜய்க்கு நன்றி சொன்ன பாரதிராஜா தம்பி!..