கொளத்தூரில் ஜெயிச்சது நான்தான்!.. வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து முக ஸ்டாலின் வழக்கு!..
2026 சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவரும் மு.க ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். ஏற்கனவே 2021 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டுதான் முக ஸ்டாலின் வெற்றி பெற்று முதலமைச்சராக மாறினார்.
அவரின் சொந்த தொகுதி என்பதால் மக்களுக்கு பல திட்டங்களையும் அவர் நிறைவேற்றியதாக சொல்லப்பட்டது. ஆனாலும் 2026 தேர்தலில் அந்த தொகுதி மக்கள் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்தனர். இதன் காரணமாக கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட விஎஸ் பாபு வெற்றி பெற்றார்..
அவர் வெற்றி பெற்றதும் இரண்டு கைகளாலும் அவர் காட்டிய மேனரிசம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில்தான் வி.எஸ் பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முக ஸ்டாலின் தற்போது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
ஆறு வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விபேடுகளை ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும், கொளத்தூர் தொகுதியில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனவும் முக ஸ்டாலின் அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.