தைரியம் இருந்தா விஜய் வாயை திறந்து பேசட்டும்!.. உதயநிதி ஸ்டாலின் சவால்!..
தமிழக அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தவெக அரசு பல பாராட்டுக்களையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜயையும், தவெக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
முக்கியாக முதல்வர் விஜய் எதற்கும் வாய் திறந்து பேசுவதில்லை. காவிரி நீரை கூட கேட்டு அவர் பெறவில்லை என கூறி வருகிறார். இது தொடர்பாக தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது முதல்வரை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், இரவே காவல்துறை பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில்தான் இன்று விவசாய பட்ஜெட் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த ஆட்சியில் காவிரியில்தான் தண்ணீர் வரவில்லை என்று பார்த்தால் இன்று அறிவித்த வேளாண் நிதி நிலை அறிக்கையிலும் எதுவும் இல்லை. நேற்றை போலத்தான் இன்றைக்கும்.. திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த ஆட்சியில் அறிவித்த திட்டத்தின் பெயர்களை மாற்றி அதற்கு முன் அவர்களின் கட்சி பெயரில் ஒரு வார்த்தையை சேர்த்து புதிய திட்டம் போல அறிவித்திருக்கிறார்கள்.
காவிரி விவகாரம் பற்றி பேச நாளை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர கடிதம் வழங்கியிருக்கிறோம். அப்போது நாங்கள் நிறைய கேள்விகளை எழுப்புவோம்.. முடிந்தால்.. தைரியம் இருந்தால் முதலமைச்சர் வாயைத் திறந்து பதில் சொல்லட்டும் என அவர் கூறியிருக்கிறார்.