1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. premalatha vijayakanth says adhav arjuna only talk

ஆதவ் அர்ஜுனா மட்டுமே பேசினா நாங்க எப்ப பேசுறது?.. பிரேமலதா கோபம்!...

premalatha
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைர் பதவியில் அமர்ந்துவிட்டார். எப்படியாவது மக்களுக்கு நல்லாட்சியை கொடுத்துவிட வேண்டும் என்கிற முயற்சியில் முதலமைச்சர் விஜய் இறங்கியிருக்கிறார்.

அதற்கு பல தடைகள் இருந்தாலும் அவர் நினைத்ததை சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் தவெகவின் செயல்பாடுகளை திமுக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோருக்கு இடையே காரசாரமான வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.

திமுக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு தவெக அமைச்சர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா அடிக்கடி எழுந்து பேசுகிறார். நேற்று கூட ஓ.பன்னீர்செல்வம் இதை சபாநாயகரிடம் கூறினார். மற்றவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஆதவ் அர்ஜுனா எழுந்து பேசுகிறார். இது எந்த வகையில் நியாயம்?’ என அவர் கேள்வி எழுப்பினார். திமுக எம்.எல்.ஏக்களோ, உதயநிதியோ முதல்வரிடம் ஒரு கேள்வியை கேட்டால் ஆதவ் அர்ஜுனாவே எழுந்து பதில் சொல்கிறார்.

இந்நிலையில் செய்தியாளிடம் பேசிய திமுக பொதுச் செயலாளர் பிரேமலதா பேரவையில் ‘எல்லா பிரச்சனைகளுக்கும் ஆதவ் அர்ஜுனாதான் பதில் சொல்கிறார்.. பாதி நேரம் அவர் பேசுவதிலேயே போய்விடுகிறது.. இதனால் பேச வேண்டிய விஷயம் வேறு பக்கம் திரும்பி விடுகிறது.. இதனால் நேரமும் போதவில்லை.. அதுதான் உண்மை’ என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
திமுக தோல்விக்கு இதுதான் காரணம்!.. செயற்குழு கூட்டத்தில் பேசிய முக ஸ்டாலின்!..