செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (13:39 IST)

இனிமேல் இன்ஸ்டாகிராம்ல போட்டோ போட முடியாது! – இன்ஸ்டா தலைவர் அளித்த அதிர்ச்சி செய்தி!

உலகம் முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் தளத்தில் வருங்காலத்தில் புகைப்படங்கள் பதிவிட முடியாது என அதன் தலைவர் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பல்வேறு சமூக வலைதளங்கள் மக்களிடையே புழக்கத்தில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று இன்ஸ்டாகிராம். உலகம் முழுவதும் பல திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள நிலையில் அவர்களது ரசிகர்களும் அவர்களை அதில் பின் தொடர்ந்து வருகின்றனர். மேலும் பிரபலங்கள் தங்கள் புதிய போட்டோஷூட் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் புகைப்படங்களுக்காகவே பிரபலமான இன்ஸ்டாகிராமில் வருங்காலத்தில் புகைப்படங்கள் பதிவிட முடியாது என அதன் தலைவர் ஆடம் மொசாரி தெரிவித்துள்ளார். டிக்டாக், யுட்யூப் ஷாட்ஸ் போல இன்ஸ்டாகிராமையும் வீடியோ தளமாக மாற்ற திட்டமிட்டுள்ளதால் எதிர்காலத்தில் புகைப்படம் பதியும் தளமாக இன்ஸ்டாகிராம் இருக்காது என தெரிவித்துள்ளார்.