தொடர்புடைய செய்திகள்
- வரலாறு முக்கியம்…! தலைவர்களுக்கு புத்தகங்களை பரிசளிக்கும் முதல்வர்!
- பாஜகவின் நீட் கேஸை தள்ளுபடி பண்ணனும்! – மாணவி நீதிமன்றத்தில் மனு!
- மாஸ்டர் செஃப் புதிய ப்ரோமோவை வெளியிட்ட விஜய் சேதுபதி!
- சிகிச்சைக்கு அழைக்க சென்றவர்களை அரிவாளுடன் ரவுண்டு கட்டிய கிராமம்! – நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்!
- ஆன்லைன் வகுப்பால் உளைச்சல்; தலைமுடியை சாப்பிட்டதால் உருவான கட்டி! – விழுப்புரத்தில் விபரீதம்!
இன்றும், நாளையும் 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில் இன்றும், நாளையும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
