தொடர்புடைய செய்திகள்
- மோடி ஜீ எங்க தொகுதிக்கு வந்து பேசுங்க..! – பிரதமருக்கு அழைப்பு விடுக்கும் திமுக வேட்பாளர்கள்!
- இந்த பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்: துரைமுருகன் ஆவேச பேட்டி
- மதுரையில் திடீர் மழை… மகிழ்ச்சியில் மக்கள்!
- 34 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!
- மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் ஐ.டி ரெய்டு! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
மிசாவையே பார்த்தவன் நான்.. ஐ.டி ரெய்டு எம்மாத்திரம்..! – மு.க.ஸ்டாலின் அதிரடி பிரச்சாரம்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் நடக்கும் ஐ.டி ரெய்டு குறித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வீட்டில் வருமானவரி துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அரியலூரில் பிரச்சாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பிரச்சாரத்தில் பேசியபோது “ஐடி ரெய்டால் அதிமுகவை மிரட்டியது போல திமுகவை மிரட்ட பார்க்கிறார்கள். மோடிக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது திமுக. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம். மிசாவையே பார்த்தவன் நான். இந்த ஐடி ரெய்டு எம்மாத்திரம்” என பேசியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
