1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin daughter house under IT raid

மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் ஐ.டி ரெய்டு! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க சில தினங்களே உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. செந்தாமரையின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக திமுக வேட்பாளர் எ.வ.வேலு உள்ளிட்ட திமுக வேட்பாளர்கள் வீடுகளிலும் வருமானவரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
34 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!