1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin challenge to Edappadi palanisamy,

நான் தயார், நீங்கள் தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு முக ஸ்டாலின் சவால்!

எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு முக ஸ்டாலின் சவால் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தேர்தல் நேரத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக ஸ்டாலின் ஆகியோர் விவாதம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் திமுகதான் என்றும் முதலமைச்சர் உள்பட அதிமுகவின் தலைவர்கள் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர் 
 
திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் ஜெயலலிதா மன உளைச்சல் அடைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு முக ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார் 
 
ஜெயலலிதா மரணத்தில் எங்கள் மீது அவதூறு பரப்புகிறவர்கள் ஆறுமுகச்சாமி விசாரணையில் ஆஜராக நான் தயார், நீங்கள் தயாரா என சேலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
About Writer
siva