வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (11:53 IST)

வேட்பாளர்கள் அறிமுகம்… இன்று முதல் மு க ஸ்டாலின் பிரச்சாரம்!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் மதச்சார்பற்ற கூட்டணியின் தலைவர் ஸ்டாலின் இன்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இது சம்மந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ’திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதற்கட்டமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த மண் திருவாரூரில் தொடங்குகிறார்’ எனக் கூறப்பட்டுள்ளது.