தொடர்புடைய செய்திகள்
- வியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகை! – தமிழக அரசு அறிவிப்பு!
- வெண்டிலேட்டர் வாங்கதானே காசு கொடுத்தார்! மறுக்காதீங்க! – செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் ட்வீட்!
- அமைச்சரை கொரோனாவோடு தொடர்புப்படுத்தி பேசிய நபர்! – கைது செய்த போலீஸார்!
- சாலையோர மரத்தில் தூக்கில் தொங்கிய ஓட்டுனர் ! –மது கிடைக்காததால் நடந்த அவலம்!
- பூச்சி மருந்தில் போண்டா செய்த மருமகள்! – ஆபத்தான நிலையில் குடும்பமே அனுமதி!
ஊரடங்கு எப்போ முடியுதோ, அப்பதான் சரக்கு கிடைக்கும்! – அமைச்சர் தகவல்!
மது கிடைக்காமல் தமிழகத்தில் பலர் தற்கொலை முயற்சிகளில் ஏற்படுவது குறித்து செய்திகள் வெளியான நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து அமைச்சர் தங்கமணி பேசியுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மது அருந்த முடியாமல் தவிக்கும் மது விரும்பிகள் கள்ள சாரயத்தை நாடுதல், தற்கொலை முயற்சி போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும் சிலர் ஆல்கஹால் இருப்பதால் ஷாவிங் லோஷன், வார்னிஷ் போன்றவற்றை போதைக்காக பருகி உயிரைவிட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. புதுக்கோட்டை டிரைவர் ஒருவர் மது கிடைக்காததால் தூக்கிட்டு தற்கொலை சம்பவம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மதுவுக்கு அடிமையானவர்களை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை திறக்க வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள அமைச்சர் தங்கமணி “தமிழகத்தில் ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை திறப்பதாக இல்லை” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
