1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (09:35 IST)

பூச்சி மருந்தில் போண்டா செய்த மருமகள்! – ஆபத்தான நிலையில் குடும்பமே அனுமதி!

ராணிப்பேட்டையில் பெண் ஒருவர் பூச்சி மருந்தை மைதா மாவு என நினைத்து போண்டா செய்து சாப்பிட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அருகே உள்ள ஆர்.எஸ்.கண்டிகை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மருமகள் பாரதி. வீட்டில் போண்டா செய்ய விரும்பிய பாரதி தனது மாமனாரிடம் மைதா மாவு வாங்கி வர சொல்லியிருக்கிறார். மைதா மாவு வாங்கி வந்த பெரியசாமி தனது தோட்டத்திற்கு பூச்சி மருந்தும் வாங்கி வந்து வைத்துள்ளார்.

இரண்டும் ஒரே மாவு என நினைத்து இரண்டையும் கலந்து போண்டா செய்துள்ளார் பாரதி. இதை அறியாமல் வீட்டில் இருந்த அனைவரும் போண்டாவை சாப்பிட்டுள்ளனர். சில நிமிடங்களில் அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் மருமகள் பாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுக்குறித்து அரக்கோணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.