வியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகை! – தமிழக அரசு அறிவிப்பு!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கான சிறப்பு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், மார்க்கெட்டுகள் இயங்கி வந்தாலும் சந்தைக்கு பொருட்கள் எடுத்து வருவதிலும் அதை பாதுகாப்பதிலும் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில் தமிழக அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 30 வரையிலும் சந்தைக்கு செலுத்த வேண்டிய 1% சந்தை கட்டணத்தை வணிகர்கள் செலுத்த தேவையில்லை.
விவசாயிகளிடம் பயன்பாட்டு கட்டண தொகையும் இந்த மாத இறுதி வரை வசூலிக்கப்படாது.
காய்கறிகள், பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் வசூலிக்கப்படாது. அதற்கான செலவை அரசே ஏற்கும்.
உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி செய்யப்படும்.
காய்கறிகள், பழங்களை நேரடியாக மக்களிடம் சென்று விநியோகிக்க 500 நடமாடும் வாகனங்கள் ஏற்படுத்தப்படும்
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.