1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. minister udhayanidhi says about manipur issue

மணிப்பூரை காப்பாற்ற வேண்டிய நேரமிது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி
மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை மிகுந்த கவலை அளிக்கிறது என்றும், மணிப்பூரை காப்பாற்ற வேண்டிய நேரமிது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறும் 'விஸ்வகுரு'  சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதில் படுதோல்வியடைந்துள்ளார் என்று கூறிய அமைச்சர் உதயநிதி, மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கம் மீண்டும்  இணைய சேவையை நிறுத்தியுள்ளது என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
 
மேலும் மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்று மணிப்பூரை காப்பாற்ற வேண்டிய நேரமிது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் மீண்டும் நீட்டிப்பு..நீதிபதி அல்லி உத்தரவு