திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (15:04 IST)

#AsianGames2023-வெண்கலப் பதக்கம் வென்ற விஷ்ணு சரவணனுக்கு உதயநிதி வாழ்த்து

Vishnu saravanan
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட  நாடுகள் பங்கேற்றுள்ளன.
 

இப்போட்டிகள் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இந்திய வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பல போட்டிகளில் தங்கம்., வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று வருகின்றனர்.

இந்த நிலையில், பாய்மர படகுப் போட்டியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘’சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற்று வரும் #AsianGames2023- ல் பாய்மரப்படகுப் போட்டியில்  வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பி விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் பெயரை சர்வதேச அரங்குக்கு கொண்டுசென்று பெருமைப்படுத்திய தம்பி விஷ்ணு சரவணன் அவர்களை பாராட்டுகிறோம்.

எதிர்காலத்தில் இன்னும் அவர் பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவிக்க வாழ்த்துகள்..’’என்று தெரிவித்துள்ளார்.