1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2023 (07:49 IST)

2 மாணவர்களை கடத்தி படுகொலை.. மணிப்பூரில் மீண்டும் வெடிக்கும் கலவரம்..!

மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினர் இடையே கலவரம் ஏற்பட்டு வரும் நிலையில் இரு பிரிவினர்கள் மத்தியிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தை அடக்க மத்திய மாநில அரசு போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் கலவரம் முடிந்த பால் இல்லை. 
 
இந்த நிலையில் மணிப்பூரில் 2 மாணவர்களை கடத்தி  படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு மணிப்பூர் முதல்வர் பீரன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.
 
மாணவர்கள் படுகொலை குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்துகிறது என்று கூறிய மணிப்பூர் முதல் பீரன் சிங், குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்குவோம் என உறுதியளிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் மாணவர்கள் கொலை குறித்து விசாரிக்க சிபிஐ இயக்குனர் மணிப்பூர் வருகிறார் என்றும் முதல்வர் பீரன் சிங் கூறியுள்ளார்.
 
Edited by Siva