வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (16:38 IST)

இனி மாதந்தோறும் மின் கணக்கீடா? அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக நான்கு மாதங்களாக மின் கணக்கீடு எடுக்காமல் திடீரென மொத்தமாக மின் கணக்கீடு எடுக்கப்பட்டதால் மின்சார கட்டணம் நூற்றுக்கணக்கில் வந்தவர்களுக்கெல்லாம் ஆயிரக்கணக்கில் வந்ததாக புகார்கள் எழுந்தன
 
இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மின் கணக்கீடு முறை வழக்கம்போல் தான் எடுக்கப்பட்டது என்றும் நான்கு மாதங்களுக்கு பின் மின்கணக்கீடு எடுக்கப்பட்டாலும், இரண்டு இரண்டு மாதங்களாக பிரிக்கப்பட்டு தான் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசின் மின் துறை சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்வது குறித்து தமிழக முதல்வருடன் ஆலோசிக்க உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டுமென ஏற்கனவே எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் மின் கணக்கீடு செய்யப்படுவதால் அதிக மின் கட்டணம் வருவதாகவும் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்தால் குறைவான மின்கட்டணமே பொதுமக்களுக்கு வரும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்