1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (14:03 IST)

இலவச ஆப்ரேஷன்… அதன் பின் மாதந்தோறும் 5000 ரூபாய் – ஜெகனின் அடுத்த அதிரடி !

ஆந்திராவில் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு ஓய்வெடுக்கும் காலம் வரை மாதம் 5000ரூ வழங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திராவின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி தான் பதவியேற்றதில் இருந்து அதிரடியான அறிவிப்புகளை அறிவித்து மக்களை அசத்தி வருகிறார். அதன் அடுத்த கட்டமாக இப்போது ஆந்திராவில் அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் மக்களுக்கான ஆரோக்யஸ்ரீ ஆசாரா என்ற உடல்நல திட்டம் ஒன்றை  அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் ஆந்திர மாநில அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகள் ஓய்வெடுக்கும் காலங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.225 வீதம் என மாதம் ரூ.5,000 வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்துக்கு ஆந்திர மக்களிடையே பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 26 சிறப்பு பிரிவுகளில், 836 விதமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட உள்ளது.